குரங்கிற்கு வாழைப்பழம் ஊட்டி விட்ட போலீஸ் - வைரலாகும் வீடியோ

TamilBM April 18, 2020
தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் எல்லாம் விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் போலீசார் ஒருவர் பசியுடன் இருந்த கையில்லாத குரங்கிற்கு வாழைப்பழம் ஊட்டி விட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ ஆன்லைனில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


அந்த வீடியோவில் அவர் ஒரு கையில் குரங்கிற்கு வாழைப்பழம் ஊட்டிவிட்டுக்கொண்டே மறுகையில் போன் பேசிக்கொண்டிருக்கிறார். போன் பேசி முடித்த பின்பும் தொடர்ந்து வாழைப்பழம் ஊட்டுகிறார். இந்த வீடியோ சுமார் 90 ஆயிரம் பார்வைகளையும், 7000க்கும் அதிகமான லைக்குகளையும், பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி.

Post Comments