திருமண பந்தத்தில் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் விரல்களில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வர்.

இதில் மாறிக்கொள்வது இரு மோதிரங்கள் மட்டுமல்ல, இருவரது இதயமும் தான்.

ஆனால், காலங்காலமாக இடது கையில் உள்ள நான்காவது விரலில் தான் இந்த திருமண மோதிரத்தை அணியவேண்டும் என்ற கருத்து நிலவிவருவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இதனை பின்பற்றி வருகின்றனர்.

ஆனால், அறிவியல் ரீதியாக பார்த்தால், இரத்தஓட்ட அமைப்பு(Circulatory System) எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து Tudor times ஆராய்ச்சி மேற்கொண்டது.

இதில், இரது விரலுக்கும், இதயத்திற்கும் ஒருவித தொடர்புள்ளது, அதாவது, இடது கையில் நான்காவது விரலில் உள்ள நரம்பு நேரடியாக இதயத்துடன் இணைகின்றது.

இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது, இதனை “காதல் நரம்பு” என்று மக்கள் அழைக்கின்றனர், அதாவது இந்த மோதிரத்தின் மூலம் பரிமாறப்படும் அன்பு நேரடியாக இதயத்திற்கு சென்று சேர்கிறது என்பது மக்களின் நம்பிக்கை.

ஆனால், திருமண மோதிரத்தை இடது கையில் தான் அணிய வேண்டும் என்று எவ்வித சட்டமும் இல்லை, உங்களுக்கு எந்த விரலில் மோதிரம் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்கிறீர்களோ, அந்த விரலில் அணியுங்கள்.

ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு கலாசாரங்கள் பின்பற்றப்படுகின்றன, பொதுவாக வடக்கு ஐரோப்பிய நாடுகளில், திருமண ஜோடிகள், வலது கையில் மோதிரம் அணிகின்றார்கள்.

ஆஸ்திரியா, டென்மார்க், போலந்து, ஜேர்மன் போன்ற நாடுகள் இந்த வலது கை கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள்.

ஜேர்மனிய ஜோடிகள், திருமணத்திற்கு முன்னர் இடது கையிலும், திருமணம் முடிந்த பின்னர் வலதுகையிலும் மோதிரத்தை மாற்றிக்கொள்கின்றார்கள்.

இவ்வாறு மோதிரத்தை திருமணத்திற்கு பின்னர் வேறு விரலில் மாற்றிக்கொள்வது, ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகின்றன.

Post Tags:

TamilBM

உங்கள் பதிவை TamilBM திரட்டியில் இணைக்க