கடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சோக செய்தி கிடைத்துள்ளது. டெல்லியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சியா கக்கர் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சியாவிற்கு வெறும் 16வயதுதான் ஆகிறதாம். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அவருக்கு டிக்டாக் தளத்தில் 1.1. மில்லியன் பால்லோவெர்ஸ் இருக்கின்றனர். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post Tags:

TamilBM

உங்கள் பதிவை TamilBM திரட்டியில் இணைக்க