கோவிலுக்குள் தாலி கட்டிய காதல் ஜோடி... தற்கொலை செய்துகொண்ட சோகம்!

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று காதல் ஜோடி இருவர் திருமணம் செய்துவிட்டு அடுத்த ஒரு சில நிமிடங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பாஸ்குமார். இவர் செம்பாகுறிச்சியை சேர்ந்த கவிதாவும் காட்டுகொட்டாய் பகுதியில் உள்ள கலை கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.

கல்லூரி படிக்கும்போது ஏற்பட்ட பழக்கம் நாளாடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், ஈரியூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டு, பின்பு வெளியே வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து இருவரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.