80 வயது முதியவர் ஒருவர், 29 வயது இளம்பெண்ணை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்.

 80 வயது முதியவர் ஒருவர், 29 வயது இளம்பெண்ணை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்.


முதியவரின் மகள் இவர்களது திருமணத்துக்கு சாட்சி கையெழுத்து போட, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நெட்டிசன்கள், வாயை பிளந்துள்ளனர். சர்வதேச ஊடகங்கள் இந்த காதல் ஜோடிகள் குறித்த செய்திகளை எக்ஸ்குளூசிவாக வெளியிட்டு காதலர் மாதமான பிப்ரவரியை கலர்புல் ஆக்கி உள்ளனர்.காதல்.. ஜாதி, மதம், இனம், மொழி பார்க்காது.. காதலுக்கு கண் இல்லை என்பது வெளியாகும் புதிய புதிய செய்திகள் மூலம் தெரியவந்து கொண்டுதான் இருக்கிறது. உலகமே காதலர் தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடி முடித்திருக்கிறது. காதலை சொல்லி வென்றவர்கள் இருக்கிறார்கள்.. காதலில் வென்றவர்கள் கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள். இந்த கதையை கொஞ்சம் கேளுங்கள்.. அதற்கு முன் நீங்கள் 90ஸ் கிட்ஸ் என்றால் மனதை தேற்றி கொண்டு படியுங்கள்..


காதலுக்கு வயது இல்லை.. ஆம்.. இவர்கள் காதலுக்கு வயது வித்தியாசம் 51.. தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் வசிக்கும் 29 வயது இளம்பெண் டெர்சல் ராஸ்மஸ். சட்டக்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் இவர், பத்திரிகை ஒன்றில் பகுதிநேரமாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு, பேட்டிக்காக வில்சன் ராஸ்மஸ் என்ற தாத்தாவை சந்தித்திருக்கிறார். ‘ரோமியோ’ தாத்தாவால் கவரப்பட்ட இளம்பெண்ணுக்கு காதல் ஊற்றெடுத்திருக்கிறது.காதலை திருமண பந்தத்தில் இணைக்க எண்ணிய இந்த ஜோடி, தாத்தாவின் 54 வயது மகளிடம் விஷயத்தை கூறி இருக்கிறார்கள். முதலில் ஷாக்கான அவர், பின் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார். ஆனால், டெர்சலின் தாய் வெகுண்டெழுந்திருக்கிறதார். அவரை விடவும் தாத்தாவுக்கு 24 வயது அதிகமாம். ஒருவழியாக அவரையும் சமாதானம் செய்து தங்கள் காதலை வெற்றி பெற வைத்துவிட்டது இந்த அபூர்வ ஜோடி.


சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தாத்தாவின் மூத்தமகள் சாட்சி கையெழுத்து போட்டிருக்கிறார். திருமணத்தில் அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, இந்த ஜோடி உலக புகழ் அடைந்துவிட்டனர்.தங்கள் காதல் குறித்து ராஸ்மஸ் கூறுகையில், ‘வில்சனை பார்த்தவுடன் அவரை பிடித்து விட்டது. அவர் என்னை நன்றாக பார்த்து கொள்வார் என தோன்றியது. இவர் தான் என் வருங்கால கணவர் என்பதை அப்போதே முடிவு செய்து விட்டேன். நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். அவர் கிடைத்ததற்கு நான் மிகவும் பாக்கியசாலி. என்னை அதிகமாக காதல் செய்கிறார்’ என்றார். சூப்பர்ப்பா…!