பாகுபலி பட பாப்பா இப்போ எப்படி இருக்கு தெரியுமா?: வைரல் போட்டோ

 பாகுபலி படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தை அடுத்து இந்தியா முழுவதும் பிரபலமானார் பிரபாஸ்.பாகுபலி படத்தை பார்த்த அனுவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதன் இரண்டாம் பாகம் கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. பாகுபலியை போன்றே பாகுபலி 2 படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆற்றில் மூழ்கும்போது தன் கையில் குழந்தையை தூக்கிப் பிடித்த காட்சி பிரபலமானது. மகேந்திர பாகுபலியாக வந்த அந்த குழந்தை பொம்மை இல்லை நிஜம் தான் என்று ராஜமவுலி தெரிவித்தார்.

மகேந்திர பாகுபலியாக வந்த குழந்தையின் பெயர் தன்வி. அந்த குழந்தைக்கு தற்போது 7 வயதாகிறது. பாகுபலி பட குழந்தை இது தான் என்று கூறி தன்வியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.தன்வியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவரை வாழ்த்தியுள்ளனர்.