கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறும் காளை!

 கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற மால் ஒன்றில், சீன புத்தாண்டை வரவேற்கும் விதமாக உருவாக்கப்பட்ட 3டி அனிமேஷன் வீடியோ ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 


தங்க நிற காளை ஒன்று, கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறுவதை நீங்கள் பார்த்தீர்களா? எப்படி முடியும் அங்கு சென்றால் தான் பார்க்க முடியும் என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இங்கே நீங்கள் பார்க்கலாம். டுவிட்டரில் வெளியாகி இருக்கும் அந்த வீடியோவை ஹோலி கவ் என்ற டுவிட்டர் பயனரால் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.


வீடியோவில், ஒரு உலோக காளையை, இரு ரோபோக்கள் சேர்ந்த தங்க நிறம் பூசுகின்றன. பின் ரோபோக்கள் அகல, காளைக்கு உயிர் பிறக்கிறது. கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் அந்த காளைக்கு எதிரே, கொரோனா வைரஸ் இருக்கிறது. வைரசுக்கு எதிராக போராடும் விதமாக, உயிற்பெற்ற காளை, மூர்க்கமாக கொரோனா மீது முட்டி, கண்ணாடியை உடைத்து கொண்டு வெளிவருகிறது. பிறக்கவிருக்கும் புத்தாண்டு, கொரோனாவை வெற்றி கொள்ளும் என்ற அர்த்தத்தில் இந்த 3டி அனிமேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது.


16 நொடிகள் மட்டும் ஓடும் இந்த வீடியோவை தற்போது வரை 4.58 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 12.6 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். 2500க்கும் அதிகமானோர் ரீடுவிட் செய்துள்ளனர். லைக்ஸ்கள் தொடர்ந்து குவிந்து வருவதால், அது வைரலாகி உள்ளது.