யானையின் மீது நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபலம் – வலுக்கும் எதிர்ப்பு

 சுமத்ரா யானையின் மீது நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிரபலம் மீது, இயற்கை ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ரஷ்ய நாட்டை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலமும், முன்னாள் டென்னிஸ் வீரர் யெவ்ஜெனி கபெல்னிகோவின் மகளுமான அலிஸ்யா கபெல்னிகோ,இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள அரிய வகை சுமத்ரா யானையின் மீது நிர்வாணமாக படுத்தபடி கொடுத்த போஸ், இயற்கை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அலிஸ்யா, நிர்வாணமாக, அந்த யானை மீது படுத்தபடி போஸ் கொடுக்கிறார்.


இந்த வீடியோவை பார்த்தவர்கள், இது அந்த விலங்கின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பணத்திற்காக என்ன வேண்டுமென்றாலும் இவரை போன்றவர்கள் செய்வார்கள் என்று மற்றொருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

யானை மீதான அழகியல் உணர்வின் வடிவமாகவே, இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளதாக அலிஸ்யா தெரிவித்துள்ளார்.


இந்த இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோ மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, உள்ளூர் மக்களுக்கு உதவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யானைகள் மீதான நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அலிஸ்யா கபெல்னிகோ, 2015ம் ஆண்டில் மாடலாக தனது வாழ்க்கையை துவக்கி, பின் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும், போட்டோகிராபி மாடலாகவும் உள்ளார்.


எல்லே மற்றும் வோக் பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் இவரது போட்டோ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அலிஸ்யா கபெல்னிகோ, தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், பிரிட்டனின் லண்டனிலும் பெரும்பாலான பொழுதை கழித்து வருகிறார்.