கனடாவில் பரிதாபமாக இறந்த சிறுமி: அமைதியாக உயிர் பிரிந்ததாக உருக்கமான தகவல்

கனடாவில் வாகன விபத்தில் சிக்கிய இரண்டரை வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Brant கவுண்டியை சேர்ந்த டவூன் பட்லர் என்ற இரண்டரை வயது சிறுமி கிறிஸ்துமஸ் தினத்தன்று அங்குள்ள சிறிய சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வாகனம் ஒன்று பட்லர் மீது மோதிய நிலையில் அதன் உள்ளே அவர் சிக்கி கொண்டார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பட்லருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பட்லர் புத்தாண்டு தினத்தன்று உயிரிழந்துள்ளார். இந்த தகவலை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக வேறு தகவல்கள் யாருக்கேனும் தெரிந்திருந்தால் எங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் மரணம் குறித்து உறவினர்கள் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்லரின் உயிர் அமைதியான முறையில் பிரிந்தது என கூறினர்.

இதனிடையில் அவள் எங்களின் நேசத்துக்குரிய மகளாக இருந்தார் என பெற்றோர் உருக்கம் தெரிவித்துள்ளனர்