பேய்க்கு பயந்து நிர்வாணமாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ

ரஷ்யாவில் ஒரு வீட்டின் முன் இருந்த வாயிற் கதவில் நிர்வாணமாக, மர்ம மனிதன் ஒருவர் சிக்கி கொண்டு தவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் Rostov Oblast பகுதியில் உள்ள வீட்டின் முன்பு இருந்த வாயிற்கதவில் மர்ம மனிதன் ஒருவர் நிர்வாணமாக சிக்கிக்கொண்டு தவித்துள்ளார்.

அப்பகுதி வழியாக வந்த இருவர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து, என்ன நடந்தது என விவாதித்து கொண்டே வீடியோ எடுத்துள்ளனர்.

அப்பொழுது அவர்களின் கேள்விக்கு பதிலளித்த அந்த நபர், தான் ஒரு அமானுஷ்ய ஆய்வாளர் என தெரித்துள்ளார். வீட்டின் உள்பகுதியில் அந்த மனிதர் படித்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து கம்பிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.