அல்லாஹூ அக்பர் என்று சத்தமிட்ட நபருக்கு கிடைத்த தண்டனை

சுவிஸ் நகரம் ஒன்றில் அல்லாஹூ அக்பர் என்று சத்தமிட்ட ஒருவருக்கு பொலிசார் 210 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்துள்ளனர்.

Schaffhausen நகரில் Orhan E என்னும் நபர், தன் நண்பர் ஒருவரை சந்திக்கும்போது, அல்லாஹூ அக்பர் என்று சத்தமிட்டுள்ளார்.

அப்போது அப்பகுதியில் சீருடையில் இல்லாத பொலிசார் ஒருவர் அவருக்கு அபராதம் விதித்தார்.

அத்துடன் அபராதம் செலுத்தத் தவறினால் சிறைக்கு செல்ல நேரிடுமென்றும் அவர் எச்சரிக்கப்பட்டார்.

சிறைக்கு செல்ல பயந்ததால் அவர் அபராதத்தை செலுத்தினார். ஆனால் பத்திரிகைகளுக்கு Orhan பேட்டியளித்ததால் விடயம் வெளியாகியது.

அதனால் அவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனங்கள் வெளியானது.

ஆனால் அல்லாஹூ அக்பர் என்ற சத்தம் மக்களை அச்சுறுத்தவோ அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கவோ செய்யலாம் என்று கூறியுள்ள பொலிஸ் அதிகாரிகள் பலர், அந்த நபரைக் கைது செய்த பொலிசாருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்குமுன், அல்லாஹூ அக்பர் என்று கத்துவதால், இந்த சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.