கருவாடு - யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?? எந்தெந்த உணவுடன் சாப்பிடக்கூடாது?? எந்தெந்த உடல்கோளாறு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது ? ?

எல்லோருக்கும் கருவாடு  என்றாலே பிடிக்கும். உடலுக்கும் நல்லது .  சிலபேருக்கு  கருவாடு வாடை பிடிக்காது ; சமைத்து வைத்தால், விரும்பி சாப்பிடுவர். கருவாடு சமைக்க தெரியாது சிலபேர்க்கு, அதனால்  சுவை நன்றாக இருக்காது..

கருவாடு,மீன் அசைவ உணவுகளில்   கொழுப்பு இல்லாதது..கருவாட்டை எல்லா உணவுடன்   சேர்த்து சாப்பிடக்கூடாது?. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?  என்று உங்களுக்கு தெரியுமா..? கருவாடு,மீன் ,நண்டு  உணவுடன் தயிர்,மோர்,கீரை  சேர்த்துக் கொள்ளக்கூடாது.இது விஷத்தன்மை வாய்ந்தது.. மிளகு;பூண்டு;சீரகம்;  திப்பிலி சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் அஜீரணம்,வாந்திபேதி தடுக்கும்.. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கருவாடு , மீன், நண்டு ,இறால் ,தயிர், மோர் சாப்பிடக்கூடாது.சைனஸ்,ஆஸ்துமா,தும்மல்,மூக்கடைப்பு போன்ற பிரசசனை உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமாக உள்ள உணவுகள் ; அப்பளம் ஊறுகாய் மற்றும் கருவாடு சேர்த்து கொள்ள கூடாது.

மேலும் மீன் ,கருவாடுவுடன் பால் ,தயிர் சாப்பிட்டால் வெண்மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது