மனைவியுடன் கள்ளக் காதலன் உல்லாசம்! கொடூரமாக கொலை செய்த கணவன்

மனைவியின் கள்ள கணவரை கத்தியால் கொடூரமாக வெட்டிய நபர தேடி வருவதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபர் தனது மனைவியை கைவிட்டு சென்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் லொரி ஒன்றில் பயணித்து கொண்டிருந்த போது அதனை நிறுத்திய நபர் அவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதன் போது வீதியில் சென்றவர்கள் அவ்விடத்திற்கு வந்த போது சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவரின் நிலைமை ஆபத்தாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன். காயமடைந்தவருக்கும் சந்தேக நபரின் மனைவிக்கும் இடையில் நீண்ட காலமாக தொடர்பிருந்த நிலையில் சந்தேக நபர் இந்த தொடர்பை நிறுத்தி கொள்ளுமாறு பல முறை எச்சரித்துள்ளார். எனினும் அது தொடர்ந்தமையினால் இந்த கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.