200 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பின் துறவு நாடும் இளம்பெண்!

இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 200 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பின்னர் தற்போது பிரமச்சாரியம் மேற்கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்!

லண்டன் நகரை சேர்ந்தவர் Laurie Jade Woodruff(30 வயது), பாலியல் உறவில் அதிகம் நாட்டம் கொண்ட இவர், தனது 12-வது வயதில் முதல்முறையாக தனது முதல் காதலருடன் உடலுறவு கொண்டுள்ளார். அன்று துவங்கி இன்று வரை எத்துனை ஆண்களுடன் உடல் உறவு கொண்டுள்ளார் என்பது அவருக்கே துல்லியமாக தெரியவில்லை. ஏறக்குறைய 200 ஆண்களுடன் இருக்கலாம் என உத்தேசமாக தெரிவித்துள்ளார்.

உடலுறவு கொள்வதை ஒரு போதையாக வைத்துக்கொண்ட இவருக்கு, வாரம் 6 ஆண்களுடன் படுக்கையினை பகிர்ந்துக்கொள்ள வேண்டுமாம். அதற்காக கேலிக்கை விடுதிகளை தொடர்ந்து விஜயம் செய்து தனது ஒருநாள் பார்ட்னரை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளா தொடர்ந்து வந்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்... தன்னுடைய பார்ட்னர் ஆணாகவும் இருக்கலாம், பெண்காவும் இருக்கலாம் என்னும் தளர்வையும் Laurie Jade Woodruff கடைபிடித்து வந்துள்ளார்.

தன்னைப்போன்று பாலுறவில் அதிக நாட்டம் கொண்ட நபர்களை கண்டறிந்து அவர்களுடன் பயணிப்பதை வழக்கமாக கொண்ட Laurie Jade Woodruff-க்கு ஒருகட்டத்தில் தான் இவ்வாறு ஒரு வாழ்வினை கையாண்டு வந்தால், ஒருநாள் நிச்சையம் தனது மகனையும் இது பாதிக்கும் என புரிந்துள்ளார். எனவே தனது மகன் ஹன்றியின் வாழ்வினை கருத்தில் கொண்டு தனது பாலுறவு போதை பழக்கத்திற்கு முடிவு கட்ட விரும்பியுள்ளார்.

இதற்கு ஒரே வழி துறவு மேற்கொள்வது தான் என முடிவு செய்த Laurie Jade, கடந்த நான்கு வாரங்களாக தனது துறவு பாதையினை பலமாக பின்பற்றி வருகின்றார். இதற்கு அவருக்கு வழிகாட்டியாக இருந்தது Sex and Love Addicts Anonymous (SLAA) என்னும் இணையதள பயிற்சி வகுப்பு தான். சுமார் 12 படிகளை கொண்ட இந்த பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்த Laurie Jade ஒரு கட்டத்தில் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டார். 

தனது வாழ்வினை குறித்து Diary Of A Sex Addict என்னும் புத்தக்கதின் வாயிலாக உலகிற்கு தெரியப்படுத்திய Laurie Jade சமீபத்தில் பிரபல ஆங்கில நாளேட்டிற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். இந்த நேர்காணல் தற்போது தன்னைப் போன்று பாலுறவில் அடிமையானவர்களுக்கு நல்ல பதிலாய் இருக்கும் எனவும் Laurie Jade நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுறையில் இனி ஆண்களை பார்த்தால் உங்களுக்கு வரும் எண்ணம் என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டதற்கு... நிச்சையம் பழைய நினைவுகள் வரும், ஆனால் அதற்கு முன்னதாக என் மகன் ஹென்றியின் முகம் என் கண் முன் வரும்!... என தெரிவித்துள்ளார்.