தேனீக்களை சாப்பிடும் அதிசய மனிதர்..! வைரலாகும் வீடியோ..!

மேற்கு வங்க மாநிலம் சாம்ரோம்னிபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது தலால் (32) என்ற நபர் கடந்த 16 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தேனீ கூடி கட்டியிருக்கும் இடத்தில் நின்று அதில் ஓட்டை போட்டு அதற்குள் தலையை விடுகிறார். அவர் முகத்தில் இருந்து தேனீக்கள் கடிக்கிறது அவருக்கு எதுவும் ஆகவில்லை. 

 

அதன் பின் அவர் தேன் கூட்டின் ஒரு பகுதியை எடுத்து வாயில் வைத்து சுவைக்கிறார். அப்பொழுது அவர் வாயை சுற்றியும், முகத்திலும் தேனீக்கள் மொய்க்கின்றன. அப்பொழுதும் அவர் எதுவும் செய்யவில்லை.