பொள்ளாச்சி விவகாரம் போன்றே ஆண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்கள் கும்பல்…… அதிர்ச்சி தகவல்

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பணம்பறித்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் வேலூரிலும் இதே போல சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் ரப் ஆரிப் என்பவரின் தாய் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்தார்.

தனது தாயை கவனித்து கொள்ள உதவியாளர் தேவை என ஆரிப் விளம்பரம் கொடுத்த நிலையில், அபிதா என்ற பெண் அவரை தொடர்பு கொண்டார்.

தங்களிடம் உதவியாளர் இருப்பதாகவும் வேலூர் வந்து நேரில் நீங்கள் பார்க்கலாம் எனவும் அபிதா கூறினார்.

இதை நம்பி ஆரிப் அங்கே சென்ற போது அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்ற 10 பேர் கொண்ட கும்பல் அவரை நிர்வாணமாக்கியது.

பின்னர் அருகில் ஒரு பெண்ணை நிறுத்தி போட்டோ எடுத்துக்கொண்டதோடு அதை காட்டி ஆரிப்பிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பறித்துவிட்டு விரட்டிவிட்டது.

இது குறித்து ஆரிப் அளித்த புகாரின் பேரில் ஆபிதா, தாரா என்ற 2 பெண்கள், ஷாபுதின், நதீம், கோவிந்தராஜ் என மொத்தம் 11 பேரை பொலிசார் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், வேலூரின் வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிலதிபர்கள் தங்கள் வீட்டு வேலைகள் அல்லது நபர்களைக் கவனித்துக் கொள்வதற்கு நாளிதழ்களில் விளம்பரம் அளிப்பார்கள்.

அவர்களை தொடர்பு கொண்டு இங்கே அந்த கும்பல் வரவழைக்கும்.

பின்னர் அங்கு வந்த பின்னர் அபிதா அல்லது தாரா அவர்களிடம் நெருக்கமாக பழகுவார்கள்.

இதில் சபலபுத்தி கொண்ட தொழிலதிபர்களை மயக்கி அவர்களுக்கு தெரியாமல் ஆபாச வீடியோ, போட்டோ எடுத்து பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த கும்பலிடம் பலர் சிக்கியபோதும் மானத்திற்கு பயந்து பொலிசில் சொல்லவில்லை.

இந்த கும்பலிடம் மேலும் விசாரணை நடந்து வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.