நட்சத்திர விடுதிகளில் ரகசிய கேமராக்கள் – ஜோடிகளின் அந்தரங்கம் ஆன்லைனில் லைவ்

பெரிய நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் ரகசிய கேமராக்கள் வைத்து ஜோடிகளில் அந்தரங்கத்தை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பு செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்கொரியாவில் உள்ள ஒரு கும்பல் சியோல் உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமராக்களை பொருத்தியது. அதன்பின் ஆன்லைன் மூலம் அதை ஆக்டிவேட் செய்து அந்த அறையில் தங்கும் ஆண், பெண் உல்லாசமாக இருப்பதை நேரடியாக ஒளிபரப்பியுள்ளனர்.

இதற்காக பிரத்யோக இணையதளத்தை சந்தாதாரர்களை சேர்த்து, அவர்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வசூலித்துள்ளர். இதற்கு ஆசைப்பட்டு பலரும் பணம் கட்டி இதை கண்டு ரசித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் இந்த விவகாரம் லீக் ஆனது. இதைத் தொடர்ந்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். தென் கொரியாவில் உள்ள முக்கிய 10 நகரங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஹோட்டல் அறைகளில் அவர்கள் ரகசியை கேமரா வைத்தது தெரியவந்துள்ளது.