கொல்கத்தா அணி ஐபிஎல் தரவரிசையில் முதலிடத்தில் நீடிப்பது எப்படி?

கொல்கத்தா  

ஐபிஎல் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது கொல்கத்தா அணி.

ஞாயிறன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோல்வியடைய செய்தது கொல்கத்தா அணி அதுவும் நம்ப முடியாத வகையில்.

140 ரன்கள் என்ற இலக்கை 13.5 ஓவர்களில் அடைந்தது அந்த அணி அதுவும் வெறும் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து

டாஸில் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேறு வழியே இல்லாமல் முதலில் பேட்டிங்கில் இறங்கியது, இருப்பினும் வெறும் 139 ரன்களையே அந்த அணியால் எடுக்க முடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்டீவ் ஸ்மித் 59 பந்துகளில் 73 ரன்களை எடுத்தார்

அவரை தவிர்த்து ஜோஸ் பட்லர், 34 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார்.

140 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் சிறப்பாக ஆடத் தொடங்கினார்..

முதல் விக்கெட்டுக்கு 91 ரன்களை குவித்த அவர்கள் பந்து வீச்சாளர்களை சற்று கலங்க வைத்தனர்

கிறிஸ் லின் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசி 50 ரன்களை எடுத்தார்.

சுனில் நரேன் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்களுடன் 47 ரன்களை எடுத்தார்.

கொல்கத்தா 

தனது 26 ரன்களின் மூலம் கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் ராபின் உத்தப்பா.

ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி இதுவரை நான்கு வெற்றிகளை கண்டுள்ளது.

தற்போது அவர்கள் எட்டு புள்ளிகளுடன் தர வரிசைப் பட்டியலின் முதல் இடத்தில் உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி உள்ளது.

கொல்கத்தா அணியின் சிறப்பு என்ன?

கொல்கத்தா அணி தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதற்கு காரணம் அந்த அணி சமமான ஒரு அணியாக உள்ளது.

அந்த அணியில் பேட்டிங்கில் தனிச்சிறப்பு பெற்ற சுனில் நரேன் இடம்பிடித்துள்ளார். அவரின் மர்மமான பந்து வீச்சு முறை அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அவர் பேட்டிங்கில் இறங்கினால் பெரிய பந்து வீச்சாளர்களையும் கலங்கடித்து விடுகிறார்

அவரை தொடர்ந்து கிறிஸ் லின். கடந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக முக்கியமான தருணத்தில் 31 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார்.

ராபின் உத்தப்பாவும் சிறந்த ஒரு வீரராக தன்னை நிரூபித்துள்ளார்.

அவரும் ஐதாராபத் அணிக்கு எதிராக 35 ரன்களையும், பஞ்சாபிற்கு எதிராக 67 ரன்களையும், பெங்களூரு அணிக்கு எதிராக 33 ரன்களையும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 26 ரன்களையும் குவித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு பெரும் ஆதரவாக இருக்கும் மற்றொரு வீரர் ரசல்.

ரசல்

பெங்களூரு அணிக்கு எதிராக வெறும் 13 பந்துகளில் 48 ரன்களை எடுத்த ரசலின் ஆட்டத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் ப்ரைன் லாராவும் ரசலை புகழ்ந்துள்ளார்.

அவர் அனைத்தையும் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளார்.

அடுத்து நித்திஷ் ரானா, பெங்களூரு அணிக்கு எதிராக 37 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 63 ரன்களும், ஐதாராபாத் அணிக்கு எதிராக 68 ரன்களையும் எடுத்தார் அவர்.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் 5-6ஆம் வரிசையில் உள்ள ஆட்டக்காரர்கள் வரை போட்டியை வெல்லும் திறனுடன், புத்திசாலித்தனமான பேட்டிங் திறனுடனும் இருந்தால் கொல்கத்தா அணியின் வெற்றி பற்றி கேப்டன் தினேஷ் கார்த்திக் ஏன் கவலை கொள்ள வேண்டும்? அவரே போட்டியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய வீரர்தான்.

பந்துவீச்சாளர்களில் மேஜிக் நிகழ்த்தும் அளவுக்கு யாரும் இல்லை என்றாலும் குல்தீப் யாதவ் மற்றும் அனுபவமிக்க பியூஷ் சாவ்லா உள்ளனர்.

எந்த ஒரு பேட்டிங்கையும் தடுத்து நிறுத்தும் திறமைவாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்கள்.

தற்போதைய நிலவரப்படி, வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட அணியாக கொல்கத்தா திகழ்வதால் தொடர்ந்து வரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது

இதுகுறித்து நிச்சயம் அணியின் உரிமையாளர் ஷாருக் மகிழ்ச்சி அடைந்திருப்பார்

2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா கோப்பையையும் வென்றுள்ளது.