வார்னேவின் உலகக் கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணி இதுதான்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, உலகக் கோப்பைக்கான தனது அணியை தெரிவு செய்துள்ளார்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30ஆம் திகதி, ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.

Australia-ODI-.jpg (700×365)

குறித்த அணிகள் வரும் 23ஆம் திகதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். முதல் அணியாக நியூசிலாந்து தனது வீரர்கள் பட்டியலை சமீபத்தில் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து வரும் 15ஆம் திகதி இந்தியா தனது வீரர்கள் பட்டியலை அறிவிக்க உள்ளது. இந்நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தன்னுடைய விருப்பமான அவுஸ்திரேலிய அணியை தெரிவு செய்துள்ளார்.

அவர் தெரிவு செய்துள்ள வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல், வார்னர், பிஞ்ச் ஆகிய அதிரடி ஆட்டக்காரர்கள் பலர் இடம்பிடித்துள்ளனர்.

வார்னேவின் அவுஸ்திரேலிய அணி விபரம்

டேவிட் வார்னர்

ஆர்கி ஷார்ட்

ஆரோன் பிஞ்ச்

ஸ்டீவ் ஸ்மித்

மேக்ஸ்வெல்

ஸ்டோய்னிஸ்

அலேக்ஸ் கேரி

கம்மின்ஸ்

மிட்செல் ஸ்டார்க்

ரிச்சர்ட்சன்

ஆடம் ஜம்பா

ரிசர்வ் வீரர்கள் விபரம்

ஷேன் மார்ஷ்

நாதன் லயன்

ஆஷ்டோன் டர்னர்

கவுல்டர்-நைல்