அமேஷானின் கிளவுட் சேர்வரில் பேஸ்புக் தகவல்கள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் பயனர்கள்

பேஸ்புக் வலைத்தளத்தில் அந்தரங்கமாகப் பேணப்படக்கூடிய தகவல்கள் கசிந்து வருகின்றமை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

fb-987543.jpg (1000×700)

இதேபோன்று அமேஷான் நிறுவனத்தின் கிளவுட் சேர்வரில் பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் எந்த ஒரு நபரினாலும் பயன்படுத்தக்கூடியவாறு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளமை அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

UpGuard நிறுவனம் மேற்கொண்ட இணையப் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியின்போதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஏறத்தாழ 540 மில்லியன் வரையானவர்களின் தகவல்கள் காணப்படுவதாகவும், இவை அனைத்தும் சுமார் 146 ஜிகாபைட் வரை இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தவிர இத் தகவல்களுள் பயனர்கள் பயன்படுத்தி லைக்ஸ், ரியாக்ஷன், கணக்கின் பெயர்கள், கொமண்ட்ஸ் உட்பட பல அந்தரங்க தகவல்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.