ஹாட்ரிக் சாதனை படைத்த கோஹ்லி - சிறந்த வீரர் விருது!

2019ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த வீரராக, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg (668×501)

ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தலைவராக விராட் கோஹ்லி செயல்பட்டு வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் லீக் ஆட்டங்களில் பெங்களூரு அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டிற்கான விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரராக கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4வது ஆண்டாக கோஹ்லி இந்த விருதை பெறுகிறார்.

இதன்மூலம் 3 முறைக்கு மேல் விஸ்டன் விருதுகளை பெற்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். முன்னாள் வீரர்களான டான் பிராட்மேன்(10 முறை), ஜேக் ஹாப்ஸ்(8 முறை) ஆகியோர் மட்டுமே இதுவரை 3 முறைக்கு மேல் இந்த விருதை வென்றுள்ளனர்.

கோஹ்லியுடன் சேர்த்து மொத்தம் 5 சிறந்த வீரர்களை விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் தெரிவு செய்துள்ளது.

அதில் இங்கிலாந்து வீராங்கள் ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ரோரி பர்ன்ஸ் மற்றும் வீராங்கனை டாமே பியாமவுண்ட் உள்ளனர்.

மேலும் விராட் கோஹ்லியை தவிர்த்து, இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் டி20 போட்டியில் சிறந்த வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 2வது ஆண்டாக இந்த விருதுக்கு தெரிவாகியுள்ளார்.