புதிய கேட்ஜட் - செல்போன்களை பாதுகாக்க வருகின்றது

ஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பாதிப்புக்கள் அதிகமாகும்.

எனவே இப் பிரச்சினைக்கு ஓரளவு பாதுகாப்பு தரும் வகையில் ரெம்பேர்ட் கிளாஸ் மற்றும் கவர்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் கைப்பேசிகளுக்கு முற்றுமுழுதான பாதுகாப்பினை வழங்கக்கூடிய புதிய கேட்ஜட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

AD Case என அழைக்கப்படும் இக் கேட்ஜட்டினை ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த Philip Frenkel என்பவர் உருவாக்கியுள்ளார்.

இந்த கேட்ஜெட் ஆனது கைப்பேசியின் எந்தவொரு பக்கம் தரையில் விழுந்தாலும் பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிதிதிரட்டல் நோக்கத்தில் Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg (668×371)