வைரலாகும் புகைப்படம் - டோனியின் அருகில் இருக்கும் இந்த சின்னப் பையன் யார் தெரியுமா?

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது இளம் வீரர் ரியான்பிராக் சிறுவயதில் டோனியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் தலைவரான டோனி 43 பந்துகளில் 58 ஓட்டங்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் டோனியுடன் சிறுவன் ஒருவன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாருமில்லை, நேற்று ராஜஸ்தான் அணியில் விளையாடிய ரியான் பராக் ஆவார். அவர் தன்னுடைய 8 வயதில் 2010-ஆம் ஆண்டு டோனியுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

D38enBwXsAEgfCh.jpg:large (717×764)

அதன் பின் தற்போது அதாவது நேற்று ஐபிஎல் தொடரில் டோனியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இப்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.