இளைஞருக்கு வேறு நாட்டில் நடக்கவிருந்த திருமணம்.... அங்கு செல்ல முடியாமல் தவிப்பு! இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு பாகிஸ்தான் பெண்ணுடன் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூழலில் அங்கு மணமகன் செல்ல முடியாததால் வரும் 16ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்தவர் மகேந்திர சிங். இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி பாகிஸ்தானின் Umerkot நகரில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதட்டம் நிலவியது.

இதன் காரணமாக மகேந்திர சிங் மற்றும் அவர் குடும்பத்தினர் பாகிஸ்தான் செல்லமுடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பதட்டம் முழுவதுமாக தணிந்துள்ள நிலையில் தனது வாழ்க்கை துணையை கரம்பிடிக்க மகேந்திர சிங் நேற்று பாகிஸ்தானுக்கு தனது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து வரும் 16ஆம் திகதி அவரின் திருமணம் நடைபெறவுள்ளது, இதன்பின்னர் இந்தியாவுக்கு தனது மனைவியை அவர் அழைத்து வரவுள்ளார்.

இது குறித்து மகேந்திர சிங் கூறுகையில், புல்வாமா பிரச்சனை முடிந்து அமைதி திரும்பியுள்ள நிலையில் நான் பாகிஸ்தான் செல்கிறேன், நாம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என கூறியுள்ளார்.