பெற்றோரை இழந்து முகாமில் வாடும் சிறார்கள்! - தயவு செய்து நாட்டிற்குள் அனுமதியுங்கள்...

சிரியா முகாமில் சிக்கித்தவிக்கும் அவுஸ்திரேலிய சிறுமிகள் தங்களை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கலீல் சரோஃப் என்பவன், ஜயனாப் (17), ஹோடா (15), மற்றும் ஹம்சா (8) என்கிற 3 சிறுமிகள் மற்றும் இரண்டு சிறார்களை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

இவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததை அடுத்து, 2014ம் ஆண்டு அவருடைய மனைவி தாரா நெட்டில்லேட்டன் சிறார்களுடன் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேறி ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார்.

அங்கு அவர்களுடைய பெற்றோர்கள் இறந்த பின்னர், 13 வயதிலே மூத்த மகளான ஜயனாப் (17) தன்னுடைய தந்தையின் நண்பரான முகம்மது எலோமாவை திருமணம் செய்துகொண்டு குழந்தையை பெற்றெடுத்தார்.

2015ம் ஆண்டு பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் எலோமா உயிரிழந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

சிறுமிகளின் தாய் நெட்லேட்டன் 2016 ல் ஒரு நோய் சிக்கல்களால் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. சரோஃப் மற்றும் அவரது இரண்டு மூத்த மகன்கள் அப்துல்லா, சர்காவி ஆகியோர் 2017 ஆம் ஆண்டில் ராக்காக் அருகே இலக்கு வைக்கப்பட்ட விமானத்தில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையில் மூத்த மகள் ஜயனாப்பிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதோடு இல்லாமல் தற்போது வயிற்றில் 7 மாத குழந்தையுடன் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இருந்து தப்பி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நாங்கள் சிரியாவிற்கு அழைத்துவரப்பட்டது குறித்து தெரிந்ததும், எங்களுடைய அம்மாவிடம் கெஞ்சி கதறி அழுதோம்.

எனக்கு இப்பொழுது ஆயிஷா (3), மற்றும் பாத்திமா (2) என்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான இரத்த சோகை நோயால் அவதிப்பட்டு வரும் நிலையில் 3வது குழந்தையை பெற்றெடுக்க உள்ளேன்.

இங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு திரும்ப வேண்டும் என நீண்ட நாட்களாகவே விரும்பினேன். ஆனால் பிடிபட்டால் கடுமையான சித்ரவதைங்களை கொடுப்பார்கள் என அஞ்சியே இங்கு இருந்துவிட்டேன்.

நானும் என்னுடைய குழந்தைகளும் சாதாரண ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறோம். பாக்தூஸின் கடைசி ஐஎஸ் கோட்டையை விட்டு வெளியேறிய பின், எங்களுடைய உறவினர்களுடன் பாலைவணங்களில் சில இரவுகளை கழித்தோம்.

அந்த குளிரில் நான் இறந்துவிடுவேன் என நினைத்திருந்தேன். அமெரிக்கத் துருப்புக்கள் எங்களை கண்டுபிடித்து அகதி முகாமுக்கு அழைத்துச் சென்றனர் என தெரிவித்துள்ளார்.

அல் ஹால் முகாமில் ஒன்பது அவுஸ்திரேலிய ஐஎஸ் குடும்பங்களில், 19 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகள் ஐந்து பேரும், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் 12 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பேசியிருக்கும் அவுஸ்திரேலிய அதிகாரி ஒருவர், மோதல் நிறைந்த அந்த இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவது எளிதானது அல்ல என தெரிவித்துள்ளார்.