உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..இரண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் இரண்டு தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய தொடர் என்பதால், இந்த தொடரில் கொஞ்சம் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பை தொடரில் இடம் பெறலாம் என்பதால் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், எப்போது அறிவிப்பு வரும் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

அந்த வகையில் சற்று சில நிமிடங்களுக்கு முன்பு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

D4L3Iq9WsAAZ79J.jpg:large (1024×1024)