உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - ஒரு பெண்ணை ஏமாற்றி தாம்பத்தியம் வைத்துக்கொள்வது குற்றம்: 7 ஆண்டுகள் சிறை ....

ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக நம்ப வைத்து தாம்பத்தியம் வைத்துக்கொள்வது கற்பழிப்பு குற்றம் என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற வழக்கு தொடர்பான விசாரணையின் விவரங்கள் பின்வருமாறு, மருத்துவர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி தாம்பத்தியம் வைத்துக்கொண்டதாகவும், ஆனால் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என கூறி 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே புகார் கொடுத்த பெண் வேறு ஒரு ஆணை திருமணம் செய்துகொண்டார்.

மருத்துவர் மீதான விசாரணையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழ்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மருத்துவர்.

இதில், பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்தியம் வைத்துக்கொண்ட காரணத்தால் இது கற்பழிப்பு குற்றம் கிடையாது என மருத்துவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் நாகேஷ்வரராவ், எம்.ஆர்.ஷா, மருத்துவர் மீதான கற்பழிப்பு குற்றத்தை உறுதி செய்து அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் தெரிவித்ததாவது, குற்றவாளியான மருத்துவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மறைத்து குறித்த பெண்ணை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளார்.

எனவே, நம்பவைத்து ஏமாற்றுவது கற்பழிப்பு குற்றமாகும். கற்பழிப்பு என்பது கொலைக்கு சமமானது. ஒரு கொலை நடந்தால் ஒருவருடைய உடல் அழிக்கப்படுகிறது. அதுபோன்று இங்குதான் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து அவர் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் கூட அவருக்கு இழைக்கப்பட்ட குற்றம் அழிந்து போவதில்லை.

கற்பழிப்பின் மூலம் ஒரு பெண்ணின் மரியாதைக்கு களங்கம் ஏற்பட்டு ஒரு மிருகத்தின் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். எனவே இப்படி ஒரு நிலைக்கு பெண்ணை ஆட்படுத்திய குற்றவாளி தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.

198509_1.jpg (600×338)