இந்தியாவில் சூடு பிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்.. பட்டப்பகலில் ஓட்டுக்கு பணம் கொடுத்த முதல்வர் பழனிசாமியின் சர்ச்சை வீடியோ

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் பழனிச்சாமி பெண் ஒருவருக்கு பணம் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 11-ஆம் நடைபெற்ற நிலையில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் வரும் 18-ஆம் திகதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது, அதற்கான பிரச்சாரம் இன்றோடு முடிவடையவுள்ளதா, கட்சியினர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது, பெண் ஒருவருக்கு கையில் பணம் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அவர் ஓட்டக்காகவே அந்த பணத்தை கொடுத்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

1539427444-eps.jpg (600×450)