கொள்ளையடிப்பதற்காக 500 மீற்றர் தொலைவிற்கு வாகனத்தின் பின்னால் நண்பரை கட்டி இழுத்துச் சென்ற கொடுமை!

தங்களுக்கு அறிமுகமான ஒருவரிடம் கொள்ளையடிப்பதற்காக அவரை தங்கள் வாகனத்தின் பின்னால் கட்டி 500 மீற்றர் தொலைவிற்கு இழுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜேர்மனியின் Aachen நகரில் கொடூர கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய 35 மற்றும் 36 வயதுள்ள இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

தங்களுக்கு அறிமுகமான ஒருவரை அவரது வீட்டிலிருந்து காரில் அழைத்துச் சென்ற அந்த நபர்கள் இருவரும் சுமார் 56 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

பின்னர் அவரை அடித்துத் துவைத்து, கயிற்றால் கட்டி, வாகனத்தின் பின்னால் கட்டி மிக வேகமாக 500 மீற்றர் தொலைவிற்கு இழுத்துச் சென்றுள்ளார்கள்.

பின்னர் அவரிடமிருந்த செல் போன், பணம் முதலான பொருட்களை திருடிக் கொண்ட அவர்கள், அவரை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார்கள்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரைப் பார்க்கவில்லையென்றால், அவர் காயங்கள் காரணமாக இறந்திருப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த இருவர் மீதும் கடத்தல் மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

image_710x400xt.jpg (710×400)