பேச மறுத்த காதலி மூக்கை கடித்து குதறிய வாலிபர்...!

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் காதலி தன்னுடன் பேசாததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரது மூக்கை கடித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

ராஸ்தான் மாநிலம், உதைப்பூர் மாவட்டம் கேர்வாடா பகுதியை சேர்ந்த மஞ்சு பர்மர், அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கேசவ்லால் என்பவரை காதலித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சந்த்கேடாவில் வசிக்கும் சகோதரி வீட்டுக்கு சென்ற மஞ்சு, அங்கேயே தங்கியபடி கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.

இதானல், கேசவ்லாலுடனான தொடர்பையும் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தனது நண்பன் மூலம் மஞ்சு, சந்த்கேடாவில் இருப்பதை அறிந்த கேசவ் லால், கடந்த 8ம் தேதி அவரை பார்க்க சென்றுள்ளார்.ஆனால் தன்னுடன் மஞ்சு பேச மறுக்கவே, கடும் கோபத்திற்குள்ளான அவர், மஞ்சு-வின் மூக்கை கடித்துள்ளார். வலியில் துடிக்க மஞ்சு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

nose-cut-husbend-031116-seithyindia.jpg (385×257)