நான் அழகாக இருக்கிறேனா என்று கேட்ட மனைவி, பதிலளிக்காத கணவன்: பின்னர் என்ன நடந்தது தெரியுமா?

நான் அழகாக இருக்கிறேனா என்று கேட்ட மனைவிக்கு பதிலளிக்காத கணவன்மீது தாக்குதல் புகாரளித்த அந்த பெண் சிறைக்கு செல்கிறார்.

குடும்ப வன்முறை தொடர்பாக ஒரு பெண் புகார் அளித்ததையடுத்து அவளது கணவனை கைது செய்வதற்காக சென்ற டெக்சாஸ் பொலிசாருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

Laredoவைச் சேர்ந்த Lizeth Guadalupe Ramirez (20) தனது கணவர் தன்னை தாக்கியதாகவும், கழுத்தை நெறித்துக் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.

விரைந்து வந்த பொலிசார் Lizethஇன் கணவனை கைது செய்ய முற்படும்போதுதான் உண்மையில் தாக்கியவர் Lizeth என்பது தெரியவந்தது.

விசாரணையில், சினிமா பார்க்க சென்றிருந்தபோது தான் அழகாக இருக்கிறேனா என்று Lizeth கணவனிடம் கேட்டதாகவும் அதற்கு பதிலளிக்காததால் ஆத்திரமுற்ற Lizeth, சினிமா தியேட்டரில் வைத்தே கணவனை தாக்கியதாகவும் தெரியவந்தது.

ஆனால் Lizeth தன்னிடம் தான் அழகாக இருக்கிறேனா என்று கேட்டது கூட்டத்தில் தனக்கு கேட்கவில்லை என்றும், அதனால்தான் தான் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்த அவரது கணவன், காரில் வீடு திரும்பும்போதும் தன்னை Lizeth பல முறை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் வீடு திரும்பியதும், தன்னை கீழே தள்ளி விட்ட Lizeth மீண்டும் தன்னை தாக்கியதாகவும், தங்கள் உறவினர் இருவரையும் பிரித்து விட முயன்றதாகவும் தெரிவித்தார்.

சண்டையை நிறுத்த முயன்ற அந்த உறவினரையும் Lizeth தாக்கியது தெரியவந்ததையடுத்து Lizeth கைது செய்யப்பட்டதோடு, அவர் மீது இருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, குடும்ப வன்முறைச் சட்டமும் அவர் மீது பாய்ந்துள்ளது.