இலங்கையில் நடந்தவை அனைத்தும் தற்கொலை தாக்குதல்கள்?

இலங்கையை உலுக்கிய மூன்று தேவாலய தாக்குதல்களும் தற்கொலை தாக்குதல்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஈஸ்டர் வழிபாடுகளில் பெருமளவான மக்கள் குழுமியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் குண்டுகள் வெடித்துள்ளன. மக்கள் மத்தியில் குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு தற்கொலை குண்டுதாரிகள் உத்தி கையாளப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், அதிக மக்கள் குழுமியிருக்கும் நிலையில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருந்தால் மக்கள் அடையாளம் கண்டிப்பார்கள். அதனால் தற்கொலை குண்டுதாக்குதலே நடந்திருக்க வாய்ப்பிருக்குமென தெரிகிறது.

இதேவேளை, குண்டுத் தாக்குதல்கள் அனைத்தும் தற்கொலை தாக்குதல்களாக இருக்கலாமன புலனாய்வு வட்டாரங்கள் நம்புவதாக தெரிகிறது.

இதேவேளை, கடந்த 11ம் திகதி தவ் இத் ஜமாஅத் அமைப்பினர் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் தேசிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இதையடுத்து, அனைத்து அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பும் கடந்த சில தினங்களின் முன்னர் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மேற்படி அமைப்பினரே இந்த தாக்குதலை நடத்தினார்களா என்ற கோணத்தில் புலனாய்வாளர்கள் விசாரணையை நடத்துகிறார்கள்.