கொழும்பில் 9வது குண்டு வெடிப்பு: குண்டை செயலிழக்க செய்த போது ஏற்பட்ட விபத்து என தகவல்

இலங்கை தலைநகர் கொழும்பில் 9வது குண்டு வெடிப்பு தற்போது நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பெஸ்டியனில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து 87 டெடனேட்டர் (Dtonators)எனப்படும் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புனித அந்தோணியார் ஆலயம் அருகே வேனில் இருந்த குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kochchikade தேவாலயம் அருகில் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் முயற்சியின் போது சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்ததாக தெரியவந்துள்ளது.