தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு மலேசியா? வெளிவந்த புதிய தகவல்

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து சில நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மலேசியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மலேசியாவின் வெளிநாட்டு தூதரங்கள், வழிபாட்டு இடங்கள் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படடுள்ளதாக மலேசிய பிரதி பொலிஸ்மா அதிபர் அப்துல் ஹமீத் பதுர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்திற்கு மாறாக நடைபெறும் சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி பொலிஸ் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

விழிப்புடன் இருப்பதோடு, தங்களின் தயார்நிலையையும் பொலிஸ் அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

151127115516-isis-large-169.jpg (460×259)