மர்மங்கள் நிறைந்த ஏரி.. இள்ஞ்சிவப்பு நிறத்தில் கானப்படுவது ஏன்..?

இயற்கை தாய் நமக்கு பல வகையான புதிய ஆச்சரியங்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்த உலகை படைத்திருக்கிறது. அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ முக்கியமான ஒன்று நீர்.

நீர் எப்போதுமே நிறமற்ற தன்மையை உடையதாக இருக்கும். ஆறு, ஏரி, கடலில் உள்ள நீர் எந்த நிறத்தில் இருந்தாலும் அதை கையில் எடுத்து பார்க்கும்போது நிறமற்றுதான் காணப்படும். ஆனால், நிறமுள்ள ஏரி ஒன்று உள்ளது. அதை பற்றித்தான் இன்று தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் உள்ள லேக் ஹில்லியர்...

மேற்கு ஆஸ்திரேலியாவின் மத்திய தீவில் பிங்க் லேக் ஹில்லியர் (lake hillier) அமைந்துள்ளது. இதன் நீளம் 600 மீட்டர், அகலம் 250 மீட்டராகும்.

நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள அனைத்து பக்கங்களிலும், ஏராளமான பசுமையான யூக்கலிப்டஸ் மரங்கள் சூழ்ந்துள்ளது.

 

maxresdefault.jpg (1280×720)

ஏரியானது கடலுடன் சேராவண்ணம் மணல் திட்டுக்கள் ஏரியையும், கடலையும் பிரிக்குமாறு அமைந்துள்ளது.

மேற்பரப்பில் இருந்து பார்க்கும்போது லேக் ஹில்லியரின் இளஞ்சிவப்பு நிறம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.

இந்த ஏரி ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு பெருங்கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

இந்த ஏரிக்கும், கடலுக்கும் 10 மீட்டர் மட்டுமே இடைவெளி இருக்கும். மேலும், இந்த நீரை கையில் எடுத்து பார்த்தாலும் இளஞ்சிவப்பு நிறமாகவே காணப்படும்.

ஏன் இளஞ்சிவப்பு நிறமாக உள்ளது?

சில ஆய்வாளர்கள், இந்நீரை எடுத்து ஆராய்ச்சி செய்கையில் இந்த ஏரியில் உள்ள நீரின் உப்புத்தன்மையானது கடல் நீரில் உள்ள உப்புத்தன்மையை விட அதிகமாக இருப்பதுதான் இந்நீர் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கலாம் என யூகித்துள்ளனர்.

லேக் ஹில்லியரின் இளஞ்சிவப்பு நிறத்திற்கு காரணம் தீர்மானிக்கப்படவில்லை. இருந்தாலும், Dunaliella salina மற்றும் Halophilic Bacteria -விலிருந்து உருவாக்கப்படும் ஒரு சாயம் இந்நிறத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

W1siZiIsInVwbG9hZHMvcGxhY2VfaW1hZ2VzL2MyMGJhNTI5YTE1ODcyM2YzMl9sYWtlLWhpbGxpZXItcGluay1sYWtlLWluLWF1c3RyYWxpYS00LmpwZyJdLFsicCIsInRodW1iIiwieDM5MD4iXSxbInAiLCJjb252ZXJ0IiwiLXF1YWxpdHkgODEgLWF1dG8tb3JpZW50Il1d (574×376)

இன்னும் சில ஆய்வாளர்கள், உப்பு நீர் அடங்கிய இந்த செயற்கை ஏரியின் நிறம் இளஞ்சிவப்பாக மாறுவதற்கு ஒரு வகை நீர்ப்பாசியே காரணம் என்கின்றனர்.

இந்த மர்மமான நீர்த்தேக்கம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.