பிஸியான சாலையில் திடீரென வந்த அனகோண்டா; அப்படியே நின்ற டிராஃபிக் - வைரல் வீடியோ!

பிரேசில் நாட்டின் போர்டோ வெல்ஹோ நகரின் முக்கிய சாலை மிகவும் பிஸியாக காணப்பட்டது. இந்நிலையில் திடீரென மிகப்பெரிய அனகோண்டா பாம்பு ஒன்று சாலையோரத்தில் இருந்து வெளியே வந்தது. பின்னர் மெல்ல நகர்ந்து, சாலையின் குறுக்கே சென்று மறுபுறம் போய்விட்டது.

இதனை பெர்னாண்டஸ் என்பவர் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். அனகோண்டா சாலையைக் கடக்கும் காட்சியை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, அனகோண்டா கடந்து செல்ல காத்திருந்தனர்.

இந்த நிகழ்வு குறித்து கிடைத்த தகவலின்படி, அனகொண்டா 3 மீட்டர் நீளமும், 30 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவைக் கண்ட உயிரியலாளர் பிளேவியோ டெரஸ்ஸினி கூறுகையில், தனக்கான உணவை தேடி அனகொண்டா சாலைப் பகுதிக்கு வந்துள்ளது. தனக்கான உணவாக நாய்கள், பூனைகள் உட்கொள்கின்றன. அவற்றின் நுகர்ந்து எளிதில் வந்து விடும். குறிப்பாக மழைக்காலங்களில் உணவு தேடி வெளியிடங்களுக்கு வரக் கூடிய சூழல் நிலவுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.