அது உங்கம்மா? ரசிகரின் மூக்கை உடைத்த ஓவியா

தன்னை பற்றி தவறாக கருத்து தெரிவித்த அஜித் ரசிகர் ஒருவருக்கு நடிகை ஓவியா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

90 எம்.எல். படத்துக்கு பின் நடிகை ஓவியா நடிப்பில் காஞ்சனா 3 வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் அவர் நேரலையில் உரையாடினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

அப்போது, ஒரு ரசிகர் என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ எனக் கேட்டிருந்தார். அதைக்கண்ட ஒரு அஜித் ரசிகர் ‘அயிட்டம்..கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போற?’ என பதிவிட்டிருந்தார்.

இதைக்கண்டு கோபமடைந்த ஓவியா ‘அயிட்டம் உங்கம்மா’ என பதிலடி கொடுத்துள்ளார்.