புகைப்படங்களுடன் வெளியான தகவல் - குண்டுவெடிப்புக்கு பின்னர் இலங்கையில் இரவு வாழ்க்கை எப்படியுள்ளது?

இலங்கையில் குண்டுவெடிப்புக்கு பின்னர் இரவு வாழ்க்கை கொண்டாட்டங்கள் அதிகளவு குறைந்து பொலிவை இழந்து காணப்படுகிறது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் மக்களின் இரவு வாழ்க்கையில் பெரியளவில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி மற்றும் பேட்டியை AFP பத்திரிக்கை எடுத்துள்ள நிலையில், ChannelNewsAsia இணையதள பத்திரிக்கையில் அது வெளியாகியுள்ளது.

அதாவது இரவு நேரத்தில் செயல்படும் ஹொட்டல்கள், மதுபான விடுதிகள், பப் எனப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் மது விருந்து நடக்கும் இரவு விடுதிகளில் மக்கள் கூட்டத்தை பார்க்கவே முடிவதில்லை.

கொழும்பில் உள்ள Park Street Mews என்ற ஹொட்டலில் முன்னர் வார இறுதி நாட்களின் இரவு நேரத்தில் மக்கள் அதிகளவு வருவார்கள்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் வந்தனர்.

அந்த ஹொட்டல் இருக்கும் பகுதியில் நிறைய மதுவிடுதிகள், ஹொட்டல் உள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை இரவில் 700, 800 பேர் அங்குமிங்கும் சென்றபடி இருப்பார்கள்.

ஆனால் குண்டுவெடிப்புக்கு பின்னர் வெறும் 20 பேரை தான் தெருவில் காணமுடிகிறது.

இது குறித்து மதுவிடுதி ஒன்றை நடத்தி வரும் ஹர்போ குனிரத்னே என்பவர் கூறுகையில், கொழும்பில் இரவு வாழ்க்கை, கடந்த சில ஆண்டுகளாக, சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சூடுபிடித்து வருகிறது.

இதன் காரணமாக அதிகளவு மதுவிடுதிகள், ஹொட்டல்கள் புதிதாக திறக்கப்பட்டன, ஆனால் குண்டுவெடிப்பின் காரணமாக எல்லாம் மாறிவிட்டது.

ஆனால் விரைவில் பழைய நிலைக்கு எல்லாம் மாறும் என நம்புகிறோம்.

விரைவில் மக்கள் அதிகளவில் வெளியில் வருவார்கள் என கூறியுள்ளார்.