இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு பிறந்த குழந்தை இதுதான்! வெளியானது வீடியோ மற்றும் புகைப்படங்கள்

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் தம்பதிக்கு பிறந்த குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு கடந்தாண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் மேகன் கர்ப்பமானார். அவருக்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையின் புகைப்படத்தை எப்போது ஹரியும், மேகனும் வெளியிடுவார்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து குழந்தையை வெளி உலகுக்கு காட்டியுள்ளனர்.

9744478-3x2-700x467.jpg (700×467)

 

இது குறித்து மேகன் கூறுகையில், இது ஒரு அற்புதம், உலகிலேயே சிறப்பான இருவர்கள் எனக்கு கிடைத்துள்ளனர் என ஹரியையும், குழந்தையையும் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதனிடையில் குழந்தையின் பெயரை இன்னும் தம்பதி வெளியிடவில்லை.