விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது! வைரல் வீடியோ

கடல்வாழ் உயிரினங்களுடன் விளையாடுவதையும் அவற்றை உணவாக உண்பதையும் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றும் பெண் ஒருவர், ஆக்டோபசை உயிருடன் சாப்பிடும் வீடியோவை நேரலையாக ஒளிபரப்ப திட்டமிட்டார். அந்த வகையில் நேரலை வீடியோவில் ஆக்டோபசை சாப்பிட முயன்ற போது அவரின் முகத்தில் படர்ந்துகொண்டு ஆக்டோபஸ் அவரது முகத்தில் கடிக்க தொடங்கியது.

சில விநாடிப் போராட்டத்துக்குப் பிறகு ஆக்டோபஸைத் தன் முகத்தில் இருந்து அந்த பெண் பிரித்தெடுத்தார். ஆக்டோபசை முகத்தில் இருந்து அந்த பெண் நீக்கிய போது, அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது. இந்த வீடியோ குறித்து சமூகவலைதளவாசிகள் அப்பெண்ணை மீம்ஸ்களால் வறுத்தெடுத்துவருகின்றனர்.