14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவன்..! அழகான ஆண் குழந்தை பிறந்தது...!

நேபாள நாட்டின் ரூபி வேலி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ரமேஷ் தாமங், இவன் 5ம் வகுப்பு படித்து வருகிறான். அவனும் அதே பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பபித்ரா தாமங் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில் திடீர் என பபித்ரா தாமங் கர்ப்பமானார். இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து பிரச்னையான நிலையில் அதற்கு காரணம் ரமேஷ் தாமங் என தெரியவந்தது. 

இதையடுத்து பபித்ரா தாமங் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதாவது 14 வயது மாணவி 13 வயது சிறுவன் மூலம் தாயாகியுள்ளார். 

தற்போது இருவீட்டாரும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனார். ஆனால் நேபாள நாட்டு சட்டப்படி ஆணிற்குள் பெண்ணிற்கு திருமணம் ஆக 20 வயதாக வேண்டும் என்பதால் அப்பகுதியை சேர்ந்த மாவட்ட கலெக்டர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இருவீட்டாரிடமும் பேசி திருமணம் நடக்கவிடாமல் தடுத்துவிட்டார்.

மேலும் இருவருக்கும் 20 வயதை கடந்த பின்பு திருமணம் நடத்த தடையில்லை என கூறி தற்போது நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினார். 

இதற்கிடையில் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு இரு கைகளிலும் நடுவிரல் இல்லை. கர்ப்ப காலத்தின் போது தாய்க்கு ஊட்ட சத்து குறைவாக இருந்த காரணத்தாலும், குறைவான வயதிலேயே கர்ப்பமான காரணத்தாலும் குழந்தைக்கு இந்த பிரச்னை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.