கமலின் சர்ச்சைப் பேச்சுக்கு ரஜினிகாந்தின் பதில் என்ன?

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் கூறிய சர்ச்சைப் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிரும், கமல்ஹாசனின் நண்பருமான ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.

அப்போது இந்த விடயம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இதுதொடர்பாக தான் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் முதற்கட்ட படப்பிடிப்பு நன்றாக இருந்ததாக குறிப்பிட்டார்.