இலங்கையில் உள்ள ஒரு தெருவில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்... அலங்கோலமாக காட்சியளித்த தெருவின் வீடியோ

இலங்கையின் மினுவங்கோடா பகுதியில் உள்ள கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, பல கடைகள் தீயில் கருகிய வீடியோ வெளியாகியுள்ளது.

இலங்கையின் சில பகுதிகளில் இரு தினங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் கடைகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் மினுவங்கோடா பகுதியில் உள்ள பல கடைகள் சூறையாடப்பட்டது.

அங்குள்ள ஒரு தெருவில் உள்ள கடைகள் அடித்து நொறுக்கப்பட்டும், தீவைத்தும் கொளுத்தப்பட்டது.

Georgia_Rob_Pinney_20.jpg (1800×1200)

இதன் காரணமாக தெரு முழுவதும் குப்பைகளாக அலங்கோலமாக காட்சியளித்தது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.