தீக்குளித்து தற்கொலை செய்த இளம்பெண்.. அவர் கொடுத்த மரண வாக்குமூலம்.. வீடியோவை பார்த்து அதிர்ந்த உறவினர்கள்

இந்தியாவில் இளம் பெண் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புனேவை சேர்ந்த சேத்தன். இவருக்கும் யோகிதா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.

சேத்தன் மற்றும் யோகிதா ஆகிய இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் யோகிதா விஷம் குடித்த நிலையில் பின்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யோகிதாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னர் மருத்துவர் மற்றும் பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், என் கணவரும், மாமனார், மாமியாரும் என்னை அடித்து கொடுமைப்படுத்தினார்கள்.

இதனால் தான் நான் தீக்குளித்தேன் என கூறினார்.

யோகிதாவின் உறவினர்கள் கூறுகையில், வரதட்சணை கேட்டு யோகிதாவை அவர் கணவர் வீட்டார் வெகு காலமாகவே கொடுமைப்படுத்தி வந்தனர்.

ஆனால் யோகிதாவுக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மரண வாக்குமூலம் கொடுத்ததை நம்பமுடியவில்லை.

மருத்துவமனையில் யோகிதா சிகிச்சையில் இருக்கும் போது எடுத்த வீடியோவை பொலிசார் எங்களிடம் காட்டிய போது அதிர்ந்துவிட்டோம்.

ஏனெனில் அவர் பேசும் நிலையிலேயே இல்லை என கண்கூடாக தெரிந்தது என கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யோகிதாவின் கணவர் சேத்தன் மற்றும் மாமனார், மாமியார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.