இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நாடு! எத்தனை கோடிகள் தரப்போகிறது தெரியுமா?

இலங்கை பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக சீனா 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தியை பிபிசி பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு செவ்வாய்க்கிழமை பிற்பகல், சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் போதே நிதி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.

அப்போது இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக இலங்கை ஜனாதிபதியிடம் சீன ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அதே போல இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கும் சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து, இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்புக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

America-1.jpg (1600×600)