பரப்புரைக்கு அனுமதி மறுப்பா... இதோ என் பரப்பரை... கமல் வெளியிட்ட உருக வைக்கும் வீடியோ

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சூலூர் பரப்புரை கூடுட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இணையம் மூலம் தனது பரப்புரை மேற்கொண்டுள்ளார் அவர்.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் அரவக்குறிச்சி பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கல் வீசப்பட்ட நிலையில், சூலூா் தொகுதி பிரசாரத்திற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா்.

இந்நிலையில், கமல் சமூல வலைத்தளம் மூலம் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்திற்கு நன்றி. இதோ என் பரப்புரை தமிழ்நாடு காண.. என்ற பதிவுடன் 3 நிமிட பரப்புரை வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Kamal-Hassan-released-the-list-of-people-s-candidates-Video_1200x630xt.jpg (1200×630)

 

குறித்த வீடியோவில் பேசும் கமல், ஒட்டப்பிடாரத்தில் தான் பிரச்சாரம் மேற்கொண்ட போது சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து பரப்புரை மேற்கொண்டுள்ளார்.