கொலை செய்யப்பட்ட தந்தைக்காய் குட்டி மகளின் உருக்கமான வரிகள்! பலரையும் கண்கலங்க வைத்தது

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட தனது தந்தைக்கு அவரது குட்டி மகள் எழுதியுள்ள உருக்கமான வரிகள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த ஜொன் லூயிஸ் (32) கடந்த செவ்வாய்க்கிழமை மிடில்ஸ்பரோ பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜொனாதன் போர்டிட் என்ற 29 வயதான இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த பிரித்தானியருக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதன்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பலூனில் சில உருக்கமான வரிகள் எழுதப்பட்டிருந்தன.

அவை ஜோன் லூயிஸின் இளைய மக்களால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.

அந்த பலூனில், உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் அப்பா. என் முழு இதயத்தோடும் நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் போய் விட்டீர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

என் இதயத்தில் பாதி பரலோகத்திற்கு சென்று விட்டது. இப்படிக்கு உங்கள் இளவரசி என எழுதப்பட்டிருந்தது.இந்த நிலையில், குறித்த உருக்கமான வரிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.