ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்பவரா நீங்கள்? இந்த அதிர்ச்சி தகவலை முதலில் படியுங்கள்

இன்றைய இயந்திர உலகில் நேரத்தை மீதப்படுத்துவதற்காக பலரும் ஒன்லைன் மூலமான பொருட்கொள்வனவில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்படியானவர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தி பொருட்கொள்வனவில் ஈடுபடுபவர்களை கூகுள் நிறுவனம் கண்காணித்து வருவதுடன் அது தொடர்பான தகவல்களை சேகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை CNBC நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இருந்தே இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இதனை அழிக்கக்கூடிய வசதி தரப்பட்டுள்ளதாகவும், Google Express மற்றும் Google Play Store போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கொள்வனவு தொடர்பான தகவல்களும் சேமிக்கப்படுவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg (900×500)