அரை நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய கெமராவை தவற விட்ட பிரான்ஸ் சுற்றுலாப்பயணியின் கோரிக்கை!

பிரித்தானியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு இளம்பெண், தனது கெமராவை தவற விட்டுவிட்டதாகவும், அதை கண்டுபிடிப்பவர்கள் தனக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Lily Mika, ஸ்காட்லாந்திலுள்ள Isle of Skye என்ற இடத்திற்கு தனது காதலருடன் சுற்றுலா சென்றிருந்தார்.

அப்போது ஒரு பத்திரிகை புராஜக்டுக்காக பல பிரபல சுற்றுலாத்தலங்கள் முன்பு நின்று அரை நிர்வாணப்படங்கள் எடுத்துள்ளார் அவர்.

பின்னர் விமான நிலையம் புறப்பட்டபோதுதான் அவர் தனது கெமராவை தவற விட்டதை உணர்ந்தார்.

பிரித்தானியர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள Lily, தனது கெமராவில் இருக்கும் படங்கள் தனக்கு மிகவும் முக்கியம் என்றும், அவை இருந்தால்தான் தன்னால் தனது புராஜக்டை முடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று தான் நம்புவதாக தெரிவிக்கும் Lily, இணையம் மூலமாக என்ன மாஜிக் வேண்டுமென்றாலும் நிகழலாம் என்கிறார், அதாவது தனது கெமராவைக் கண்டு பிடிப்பதோடு தன்னை தொடர்பு கொண்டு தன்னிடம் ஒப்படைக்கலாம் என்கிறார்.