பிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்! -

தெரசா மேயின் கட்சியினரே அவருடைய பிரெக்சிட் ஒப்பந்தத்தை எதிர்க்கும் நிலையில், அதை கிடப்பில் போட்டார் அவர்.

நேற்று மக்களவை தலைவரான Andrea Leadsom தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தெரசா மேயின் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறலாம் என தகவல் கசிந்தது.

இந்நிலையில் தனது பிரெக்சிட் தொடர்பான ஒப்பந்தத்தை கைவிட்ட தெரசா மே, நாளை பதவி விலகலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதமரின் செய்தி தொடர்பாளர், பிரதமர் தனது சகாக்களுக்கு செவி சாய்க்கத் தொடங்கியுள்ளார் என்றார்.

பிரெக்சிட்டை நிறைவேற்றத் தவறிய தெரசா மேக்கு சரியான தீர்ப்பை அளிக்கும் வகையில் மக்கள் ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் வாக்களிக்க சென்று கொண்டிருக்கிறார்கள்.

தெரசா கட்சியினரே, தாங்கள் தோற்றுப்போவோம் என்றும், இதுதான் தங்கள் கட்சியின் முடிவு என்றும் எச்சரித்துள்ளார்கள்.

இதற்கிடையில் ஒரு பக்கம் தெரசா மே வெளியே வராமல் தனது வீட்டுக்குள்ளேயே பதுங்கி விட்டதாகவும், இன்னொரு பக்கம் அவரை வீட்டுக்கு அனுப்புவது தொடர்பாக ரகசிய கூட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.